செங்கடலில் சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து, ஹவுதி அமைப்பினர் தாக்கிய 21 ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் சண்டையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி அமைப்பு செயல்படுகிறது. ஏமனன் அரசை எதிர்த்து உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் அமைப்பான ஹவுதி அமைப்பு, காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், இல்லையெனில், செங்கடல் வழியாக இஸ்ரேல் சென்று வரும் சரக்கு கப்பல்களை தாக்குவோம் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் பல சரக்கு கப்பல்களை ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக தாக்கி வருகின்றனர். இதனால் செங்கடல் வர்த்தக வழியை பாதுகாக்க பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளுடன் இணைந்து ஹவுதி எதிர்ப்பு படையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர். ஆனால் இதனை தாக்கி செயலிழக்க செய்ததாக அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது.அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
















