ஸ்ரீராமர் அனைவருக்கும் சொந்தமானவர். இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு 3 தீபாவளி என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “நாட்டு மக்களுக்கு இந்த ஆண்டு 3 முறை தீபாவளி. முதலாவது ஜனவரி 22-ம் தேதி அயோத்தி இராமர் கோயிலில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் போது கொண்டாடப்படும்.
2-வது முறை மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமராகும்போது கொண்டாடப்படும். 3-வது வழக்கமாக இந்தாண்டு வரும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.
இந்தியா முழுவதும் ஸ்ரீராமரின் சூழல் உள்ளது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரம் வந்துவிட்டது. இந்தியா முழுவதும் மக்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். ஸ்ரீராமர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைவரும் ஸ்ரீராமருக்கும் சொந்தமானவர்கள்” என்றார்.