நல்லாட்சி, தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள், குறைபாடற்ற உற்பத்திப் பொருட்கள் ஆகிய குறிக்கோள்களில் மத்திய அரசு கவனம் செலுத்துவதால் இந்திய உற்பத்திப் பொருட்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவைப் பகிர்ந்து அது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
“நல்லாட்சி, தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள், குறைபாடுகளற்ற மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தாத உற்பத்திப் பொருட்கள் என்ற குறிக்கோள்களில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.
Union Minister Shri @PiyushGoyal elaborates how the Centre's focus on good governance, Quality Control Orders and the ‘Zero Defect, Zero Effect’ motto are making the ‘Made in India’ branding recognisable, both domestically and across the globe. https://t.co/BZGdQwEb9r
— PMO India (@PMOIndia) January 10, 2024
இதனால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்திய உற்பத்திப் பொருட்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.