இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக இந்திய வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 2ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 15ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 23ஆம் தேதி 4வது டெஸ்ட் போட்டியும், மார்ச்.7ஆம் தேதி 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பாக இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியும், பின்னர் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியிலும் இந்திய ஏ அணி பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில் இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெறும் இந்த பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் மைதானங்களைப் பற்றிய சூழ்நிலைகளை இங்கிலாந்து வீரர்கள் தெரிந்து கொள்வதற்காக தினேஷ் கார்த்திக் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் இயக்குனர் மோ போபாட் கூறியுள்ளார்.