கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது.
1990 களில் சோவியத் யூனியன் சரிவு, கொரோனா வைரஸ் தொற்று, அமெரிக்கத் தடை உள்ளிட்ட காரணங்களால் கியூபா கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து எரிபொருள் விலையை 500 சதவீதம் வரை உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 25 பெசோவிலிருந்து 132 பெசோவாக (ரூ.456)உயர்கிறது. இந்த விலை உயர்வு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்சாரக் கட்டணமும் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
எரிபொருள் மற்றும் கார் உதிரிபாகங்கள் பற்றாக்குறையால் ஏற்கனவே பொதுப் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்டில் பயணக் கட்டணங்கள் மேலும் உயரலாம் என ஒட்டுநர் ஒருவர் கூறினார்.