லண்டனில் இங்கிலாந்து பிரதமரைச் சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டனில் இங்கிலாந்து பிரதமரைச் சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 11:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லண்டன் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  நேற்று (ஜனவரி 10, 2024) இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமூகமாக இருந்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜனவரி  08  அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். அவருடன்  பாதுகாப்புத் துறை, டி.ஆர்.டி.ஓ, முப்படைகளின் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது.

இந்நிலையில் நேற்று, லண்டனில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்து பேசினார்.

இரு நாடுகளின் தலைவர்கள் வழிகாட்டுதல்படி, வரலாற்று உறவுகளை நவீன, பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையாக வடிவமைப்பதிலும், மறுவடிவமைப்பதிலும் இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.

கூட்டுப் பயிற்சிகள், பயிற்சி, திறன் மேம்பாடு, அதிகரித்த பரஸ்பர செயல்பாடுகள், குறிப்பாக கடல்சார் துறையில் இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாடுகளில் சமீபத்திய அதிகரிப்பை ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்தார்.

தொழில்நுட்பத் துறை உட்பட பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை அவர் வலியுறுத்தினார். இங்கிலாந்து பாதுகாப்புத் துறையுடனான தனது நேர்மறையான தொடர்புகள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு உறவில் புதிய நேர்மறை ஆற்றல் குறித்து ராஜ்நாத் சிங், ரிஷி சுனக்கிடம் விளக்கினார்.

அமைதியான மற்றும் நிலையான உலகளாவிய விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை வலுப்படுத்த இங்கிலாந்து மற்றும் பிற ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

21 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான தேசிய இலக்கை நோக்கி 1.4 பில்லியன் இந்தியர்களின் தேடலை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துகிறார் என்று  ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

பிரதமர் மோடியின் முயற்சிகள் குறிப்பிடத்தக்க பலனைத் தந்துள்ளன, வளர்ச்சி நிலையான தன்மையில் உள்ளது. வறுமை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. வணிகத்தில் நட்புக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், விதி அடிப்படையிலான உலக ஒழுங்கை வலுப்படுத்த இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளுடன் கூட்டுச் சேர இந்திய அரசு தயாராக உள்ளது.

வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இங்கிலாந்தும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் சுனக் முழுமையாக உடன்பட்டார்.

குறிப்பாக, தற்போது நடைபெற்று வரும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (எஃப்.டி.ஏ) பேச்சுவார்த்தை விரைவில் ஒரு வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய சகாக்களுடன் வலுவான வணிக மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளுக்கு இங்கிலாந்து அரசின் ஆதரவையும் அவர் உறுதி செய்தார்.

இந்தச் சந்திப்பின் போது, இங்கிலாந்து பிரதமருக்கு ஒரு ராம் தர்பார் சிலையை ராஜ்நாத் சிங் பரிசளித்தார். இதில் இங்கிலாந்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர் டிம் பாரோவும் கலந்து கொண்டார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லார்ட் டேவிட் கேமரூனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். பல்வேறு நிலைகளில் தீவிரமான ஈடுபாடுகளைக் கொண்ட இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையின் புதிய வேகத்தையும் திசையையும் அமைச்சர்கள் பாராட்டினர்.

பின்னர், லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் இந்திய சமூகத்தினருடன் பாதுகாப்புத்துறை  அமைச்சர் கலந்துரையாடினார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் உலகப் போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல இந்திய ராணுவ முன்னாள் படைவீரர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Tags: rishi sunakminister rajnath singh
Share
Tweet
SendShare
Previous Post

கியூபாவில் எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த முடிவு!

Next Post

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies