குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமான புறப்பட்டு சென்றது.
உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலில் வரும் 22-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம்தான் ஸ்ரீராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பு நிகழ்வை தொடங்கி வைக்கிறார். மேலும், விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சர் வி.கே. சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சேர்ந்து அகதாபாத் மற்றும் அயோத்தி இடையேயான முதல் மூன்று வார விமான சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் இன்று புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, “டிசம்பர் 30-ஆம் தேதி அயோத்தி – டெல்லி இடையே முதல் விமானத்தை தொடங்கி வைத்தோம். இன்று அயோத்தி – அகமதாபாத் இடையே விமான சேவையை தொடங்கி உள்ளோம்.
கடந்த 2014-ல் உத்தரப் பிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது அயோத்தி விமான நிலையம் உட்பட 10 விமான நிலையங்கள் உள்ளன. மேலும், 5 விமான நிலையங்கள் அடுத்த ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் தொடங்க உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெவாரில் சர்வதேச அளவிலான விமான நிலையம் தயாராகிவிடும் என்று கூறினார்.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “நான்காவது சர்வதேச விமான நிலையத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதற்கிடையே, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, அகமதாபாத் – அயோத்தி இடையே முதல் மூன்று வார விமான சேவைகளுக்கான போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.