கனடாவில் விமானம் புறப்படும் போது பயணி ஒருவர் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்டாரியோ நகர் பியர்சன் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் கனடாவின் விமானம் ஒன்று புறப்ட்டது. அப்போது விமானத்தில் இருந்த பயணி திடீரென கதவை திறந்து 20 அடி உயர்த்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனனையடுத்து அங்கு விரைந்த போலீசார், படுகாயம் அடைந்த அந்த பயணியை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் காரணமாக சுமார் 6 மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் புறப்பட்டு சென்றது.
இதேபோல் 2018 ஆம் ஆண்டு, உகாண்டாவில் உள்ள என்டெபே சர்வதேச விமான நிலையத்தில் போயிங் 777 விமானத்தின் அவசர கதவில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன் விமானப் பணிப்பெண் விழுந்து உயிரிழந்தார்.