ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2.50 மணிக்கு, 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கடியில், 220 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.
Earthquake of Magnitude:6.1, Occurred on 11-01-2024, 14:50:24 IST, Lat: 36.48 & Long: 70.45, Depth: 220 Km ,Location: Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/fN2hpmK3jO @KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/q5pkBVscsW
— National Center for Seismology (@NCS_Earthquake) January 11, 2024
இந்த நிலநடுக்கத்தால், ஆப்கானிஸ்தானில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.