ஜெயம் ரவியின் சைரன் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வருகின்றனர் படக் குழுவினர்.
தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தில இருக்கும் ஜெயம் ரவி மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று படமான பொன்னியின் செல்வனில் நடித்ததன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
தற்போது ஜெயம் ரவி அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில் தனக்குரிய ஹீரோ இமேஜை கொஞ்சம் தள்ளி வைத்து மிடில் ஏஜுடன் கொஞ்சம் நரைத்த முடியில் சிறை கைதியாக நடித்துள்ளார் .
காவல் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் வெளிவந்து இளைஞர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
பொன்னியின் செல்வனுக்கு முன்னும் பின்னும் ஜெயம் ரவி நடித்த அகிலன் இறைவன் திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை அடையவில்லை.
இதனால் ஜெயம் ரவியின் சைரன் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வருகின்றனர் படக் குழுவினர். ஏற்கனவே ஜெயம் ரவியின் பூமி படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது.
ஜெயம் ரவி நடிக்கும் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பிரதர் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை மட்டுமே 37 கோடிக்கு விற்பனையாகியுள்ளது எனவும், ஹிந்தி டப்பிங் மற்றும் இசை உரிமை 11 கோடிக்கு விற்பனையானது.
அதாவது படத்தின் ரிலீஸுக்கு முன்பே வசூலை குவித்து சாதனை புரிந்துள்ளது ஜெயம் ரவியின் பிரதர். ஓடிடியில் ரிலீஸ் ஆனாலும் தொடரட்டும் ஜெயம் ரவியின் வெற்றி.