ஜம்மு – காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள வூலார் ஏரிக்கு வரும் பறவைகளை வேட்டையாடுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீரின் வூலார் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி ஆகும். இந்த ஏரி சுமார் 200 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. இந்த ஏரியிலிந்து அதிகளவில் மீன்கள் கிடைக்கின்றன. இலட்சக்கணக்கான பறவைகளுக்கு இருப்பிடமாக இந்த ஏரி உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இலட்சக்கணக்கான பறவைகள் வருகின்றன.
இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பறவைகளை வேட்டையாடுவது அதிகரித்து உள்ளது. இதனால், பல பறவைகள் அச்சமடைந்து இப்பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறன்றன.
உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியும், பின்னர் எச்சரித்தும் பறவைகளை வேட்டையாடும் நபர்கள் திருந்தவில்லை. இதை அடுத்து, பறவைகளை வேட்டையாடும் நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அப்பகுதியில் பறவைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி உள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில், ஏரியின் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.