குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி 25ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி 25ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இடைக்கால பட்ஜெட்டில் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியை இரட்டிப்பாக்க முன்மொழியலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும், மேலும் அரசுக்கு ரூ.12,000 கோடி கூடுதல் செலவாகும் என்று தகவல் வெளியியாகியுள்ளது.
முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், வரவிருக்கும் பட்ஜெட் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும், ஏனெனில் லோக்சபா தேர்தல் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடைபெற உள்ளது.
ஆளும் அரசாங்கம் தேர்தல் வருடத்திலோ அல்லது முழு பட்ஜெட்டுக்கு போதிய அவகாசம் இல்லாதபோதும் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. தேர்தலுக்குப் பிறகு வரும் அரசாங்கம் முழுமையான வருடாந்திர பட்ஜெட்டை உருவாக்கும் பொறுப்பை ஏற்கும்.
இந்த ஆண்டு, மற்ற ஆண்டுகளைப் போல விரிவான பொருளாதார ஆய்வுக்குப் பதிலாக பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக 2024-25 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த சுருக்கமான ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.