பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,830 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படவுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,830 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்டவுள்ளது. இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம், 19,484 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியத்தில் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் (மெப்ஸ்), வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கத்தில் முன்பதிவு விரைவு பேருந்துகள்:
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்திருப்போா் மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று (கோயம்பேட்டில் பயணிக்க முன்பதிவு செய்த நேரத்தில்) பயணிக்கலாம்.
அதே நேரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக (விழுப்புரம், திருச்சி மாா்க்கம்) விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழக பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு (3 ல2 இருக்கை கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்திருப்போரும், முன்பதிவு செய்யாத பயணிகளும், விழுப்புரம், திருச்சி, மதுரை மாா்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க இருப்போரும் கோயம்பேட்டிலிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.
தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணத்துக்குச் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும், கும்பகோணம் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் கே.கே.நகா் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
இதேபோல், பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்பி வரவும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன. மொத்தம் 11,130 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், பிற ஊர்களுக்கு இடையே 6,459 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஒரே ஊருக்கு செல்ல முன்பதிவு செய்த பேருந்துகள் ஒரு நிறுத்ததிலும், முன்பதிவு செய்யாத பேருந்துகள் மற்றொரு நிலையத்திலும் நிற்கும் என அறிவாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயில் உள்ளிட்ட உரிய போக்குவரத்து இல்லாததால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.