மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 40 கோடி கொக்கைன் போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வருவாய் இயக்குநரகம் (டிஆர்ஐ) தலைமையிலான நடவடிக்கையில், கோகோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில், அடிஸ் அபாபாவிலிருந்து வந்த தாய்லாந்து பெண் (21 வயது) மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து வருவாய் இயக்குநரகம், மும்பை விமான நிலையத்தில் சோதனையின் போது, தனிநபரின் பரிசோதனையில் சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், அவளது தள்ளுவண்டிப் பையை உன்னிப்பாகப் பரிசோதித்ததில், வெள்ளைப் பொடி போன்ற பொருள் அடங்கிய பல பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அந்த பொருள் கோகோயின் என உறுதி செய்யப்பட்டது, சர்வதேச சந்தை மதிப்பு 40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை கெண்டு வந்த பெண் கைது செய்யப்பட்டு, அவர் மீது போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.