சத்தீஸ்கர் டூ அயோத்தி: ஆண்டுதோறும் 20,000 பேருக்கு இலவச இரயில் பயணம்!
Sep 13, 2026, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் டூ அயோத்தி: ஆண்டுதோறும் 20,000 பேருக்கு இலவச இரயில் பயணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் ஸ்ரீராமர் கோவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இக்கோவிலை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு உறுதி எடுத்திருக்கிறது.

ஆகவே, நாடு முழுவதும் இருந்து அயோத்தி கோவிலுக்கு பத்கர்களை இலவசமாக அழைத்துச் செல்ல பா.ஜ.க. முடிவெடுத்திருக்கிறது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் இரயிலில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்தது.

அதன்படி, முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு தரிசனத்துக்குச் செல்ல ஆண்டுதோறும் 20,000 பக்தர்களுக்கு இரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன்படி, ஆண்டுதோறும் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்காக 20,000 பக்தர்கள் இரயிலில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கான கட்டணச் செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். 18 முதல் 75 வயது வரையுள்ள நல்ல உடல் ஆரோக்கியமுள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். முதல்கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்கப்படும். அயோத்திக்கு செல்பவர்களை அக்குழுவினர் தேர்வு செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாநில சுற்றுலா வாரியம் மேற்கொள்ளும். இதற்கான நிதி சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்படும்.

மேலும், அயோத்திக்கு வாரம்தோறும் சிறப்பு இரயிலை இயக்க இரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. வாரணாசி வழியாக அயோத்திக்கு இரயில் இயக்கப்படும். பக்தர்கள் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசிப்பதுடன் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: cabinet approveChhatttisgarhRam TempleAyodyaFree Rail travel
Share
Tweet
SendShare
Previous Post

மும்பை : 40 கோடி கொக்கைன் போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் கைது!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 45 டன் லட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies