அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், யஜுர் வேத யாகம் நேற்று தொடங்கியது.
யஜுர் வேதத்தை பாராயணம் செய்வது அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் நீக்குவதாகவும், நேர்மறையான அதிர்வுகளை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. புனிதத் தலங்கள் மற்றும் மத மையங்களில் ஆன்மிக நடவடிக்கைகள் தொடங்கும் முன் பாராயணம் அவசியம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி யஜுர் வேத யாகம் நேற்று தொடங்கியது. இந்த யாகம் வரும் 14ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 101 சுவாமிகள் பங்கேற்று வேதத்தை பாராயணம் செய்த வருகின்றனர். இதற்காக ராமர் கோவில் வளாகத்தில் இரு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான வேத சடங்குகள், ஜனவரி 16ஆம் தேதி தொடங்குகிறது.