பிரேசில் நாட்டின் சிறிய தீவின் மலை உச்சியில் இரண்டு பெரிய மனித உருவங்கள் நடந்து செல்வது போன்ற வீடியோ, வேற்றுகிரகவாசிகளின் வருகை பற்றிய பரவலான ஊகங்களைத் தூண்டியுள்ளது.
பண்டைய காலங்களில் இருந்து விண்வெளி மற்றும் கோள்களின் மீது ஒரு சிறப்பு ஈர்ப்பைக் மனிதர்கள் கொண்டிருந்தனர். நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்ததால், அவற்றில் ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. நாம் விண்வெளிக்குச் சென்று சந்திரனைத் தொட்டபோது, பூமிக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியமும் வலுப்பெற்றது.
தற்போது அன்னிய அல்லது அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள் (UFO) தொடர்பான செய்திகள் அனைத்தும் புரளிகளாக மாறிவிட்டன. ஆனால் ஒரு வதந்தி கூட உண்மையாக இருந்தால், வேற்றுகிரகவாசிகள் நம்மிடையே வாழ்ந்தால் என்ன செய்வது?
பிரேசிலின் சிறிய தீவின் மலை உச்சியில் இரண்டு ராட்சத, மனிதனைப் போன்ற உயிரினங்கள் நடந்து செல்வது போன்ற புதிய வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
தென்கிழக்கு பிரேசிலின் கடற்கரையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள இல்ஹா டோ மெல் தீவில் 10-அடி உயர மலையின் உச்சியில் இருவர் நிற்கின்றனர். அவர்கள் இருவரும் வினோதமான மனிதப் பாணியில் தங்கள் கைகளை அசைப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களா என இணையவாசிகள் கிண்டலாக கேட்கின்றனர். இதுதொடர்பாக பிரேசில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.