பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில், மெட்ரோ இரயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சென்னை மெட்ரோ இரயில் தனது மெட்ரோ சேவைகளை வழக்கமாக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கி வருகிறது.
பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறையையொட்டி, பயணிகள் நலன் கருதி, மெட்ரோ இரயில்கள் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், அதேபோல, இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மேலும், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.