தேசிய இளைஞர்கள் தினத்தில் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 37 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தேசிய இளைஞர்கள் தினமான இன்று, காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள, பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் 37 ஆம் ஆண்டு நிறைவு விழா, வீட்டு மனை வழங்கும் விழா, நிறுவனர் நினைவு நாள் உதவி வழங்கும் விழா என முப்பெரும் விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
பாரதிதாசன் பள்ளி மாணவர்களுடன் உரையாடியது புத்துணர்ச்சியை அளித்தது. ஒரு சிறந்த அடுத்த தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது, தேசத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
தேசிய இளைஞர்கள் தினமான இன்று, காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள, பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் 37 ஆம் ஆண்டு நிறைவு விழா, வீட்டு மனை வழங்கும் விழா, நிறுவனர் நினைவு நாள் உதவி வழங்கும் விழா என முப்பெரும் விழாவில் கலந்து கொண்டது பெரும்… pic.twitter.com/ITPKHreALx
— K.Annamalai (@annamalai_k) January 12, 2024
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற நறுந்தொகை பாடலுக்கேற்ப, கடந்த 37 ஆண்டுகளாக கல்விப் பணி எனும் இறைபணியை தொடர்ந்து வரும் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை நிறுவிய தெய்வத்திரு. மணி ஐயா அவர்களுக்கும், அவரது மனைவியார் மனோகரி மணி அவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
மாணவச் செல்வங்கள் மத்தியில் உரையாடும் வாய்ப்பினை வழங்கிய பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் அருண்குமார் அவர்களுக்கும், துணைத்தலைவர் டாக்டர் கௌசிக் குமார் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல தலைமுறைகளுக்குக் கல்விச் செல்வம் வழங்க பள்ளி நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.