பொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம்!
Sep 9, 2025, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம்!

Web Desk by Web Desk
Jan 15, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகைம் அனைவரின் பசி தீர்க்க, உணவளிக்கும் உயிரோட்டமுள்ள பண்டிகை எனலாம்.

பொங்கல் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் முதல் நாள் (சூரியன்) கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் மனிதனை புது முயற்சியில், புதிய நம்பிக்கையில், புதிய திருப்பத்தில் புகுத்தும் நாள் என்று சொல்லலாம்.

இதனை உழவர் திருநாள் என்றும் கூறலாம். ஆடி முதல் மார்கழி வரை கழனியில் ஓயாது உழைத்து விவசாயிகள் சோர்வடைந்து விடுவார்கள். மார்கழியில் அறுவடை காலம் முடிந்து புது நெல் வீடுவந்து சேரும்போது, சோர்வு நீங்கி, மகிழ்ச்சி பொங்கும். ஓய்வு கொள்ளவும், இறைவனை வணங்கி அருள் பெறவும், குடும்பத்துடன் குதூகலமாக இருக்கவும், விவசாய வேலைகள் இல்லாத தை மாதம், முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகையின் ஆன்மீக இரகசியம் என்னவாக இருக்கும் என்று பார்க்கும்போது, முதல் நாள் பழையதை எரித்தல், போகி பண்டிகையாக (தீயதை விலக்கிவிடுதல்) கொண்டாடப்படுகிறது, புதியன புகுத்தல் (நற்பண்புகளை நடைமுறையில் கொண்டு வருதல்), இறைவன் அருள் பெறுதல் என்ற தன்மைகளின் அவசியத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.

பெரும் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் எனப்படும் இரண்டாம் தினத்தன்று முதலில் ஞான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவது ஆகும்! அதாவது உழவு செய்ய சூரியன் முழுமையாக உதவுவது போல் (உதாரணத்திற்கு: தேவையற்ற கிருமிகளை அழிப்பது), நமது துக்கங்களுக்கு காரணமாக இருக்கும் அஞ்ஞான இருளை நீக்கி, அதில் நல்ல எண்ணங்கள் விளைய ஞான சூரியனான இறைவன் ஞானத்தை (Knowledge) தருகிறார்,

இதன் மூலம் சுயம் மற்றும் முழு உலகிற்கும் நன்மை ஏற்படுகிறது. அதாவது மகிழ்ச்சி நிறைந்த நிலை உருவாகிறது. அப்படிப்பட்ட இறைவனுக்கு நன்றி சொல்லும் தினமே பொங்கல் ஆகும்.

மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல். உழவுக்கு பெரும் உதவி செய்த மாடுகளை கொண்டாடும் நாள். நாமும் நம்முடைய நலனுக்கு உதவி செய்த அனைத்திற்கும் அன்பு & நன்றி செலுத்தி கொண்டாடி மகிழ்வோம்.

அதற்கு அடுத்த நாள் பெரியவர்களுக்கும், உறவினர்களுக்கும் அன்பையும்,  நன்றியையும் தெரிவிக்கும் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இது மகிழ்ச்சியை பகிர்ந்தளிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நாமும் நம்முடைய நலனுக்காக உதவிய அனைவருடனும் நம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். இதன் மூலம் நம் மனது மிகுந்த லேசாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஏன்னென்றால் கொடுக்கும் மனதில் ஒரு பொழுதும் குறைவிருக்காது

பொங்கல் பண்டிகை திட்டமிட்ட வாழ்க்கை முறையை குறிக்கின்றது. திட்டமிடாத மனம் அனாவசிய சிந்தனைகளில் அலை பாயலாம். ஆதலால் இதனை வெற்றி கொள்ள நல்ல லட்சியங்களைக் கொண்ட வாழ்க்கையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது அவசியம். இதில் ஆத்மீக ஞானமும், தியானமும் உதவியளிக்க முடியும்.

ஆதாலால் இதன் ஆன்மீக இரகசியத்தை புரிந்து நமக்குள் இருக்கும் பழைய  தேவையில்லாத அவகுணங்களை எரித்து, நற்குணங்கள் எனும் ஆடை அணிந்து,  பொங்கல் நல்நாளில் உடலும், ஆத்மாவும், வளம் பெறக் இறைவனை அன்புடன் நினனவு  செய்து கொண்டாடி மகிழ்வோம்.

Tags: Spiritual Significance of Pongal Festivalharvest season iPongal festivalthai pongalponga;
ShareTweetSendShare
Previous Post

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Next Post

பொங்கல் பண்டிகையும், தாய் வீட்டு சீர்வரிசையும்!

Related News

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies