மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடியில் மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் இருவர் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமியின் மனைவி மீனாட்சி (வயது 62). கடந்த 2012 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 -ம் அவரது வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயமடைந்த மீனாட்சி குத்தாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால், சந்திரசேகர், கல்யாணம், கோவிந்தராஜ், அன்பழகன் உள்ளிட்டோர் மீது குத்தாலம் காவல் நிலையத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கல்யாணம் மற்றும் அன்பழகனுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திமுக மாஜி எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.