பொங்கல் விழாவையொட்டி, கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை விண்ணைமுட்டும் அளவு உயர்ந்துள்ளது. இதனால், பெண்கள் மற்றும் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜனவரி 14-ம் தேதி முதல் நாடு முழவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் வெகுவிமரிசையாக கொண்டுவது வழக்கம். இதில், முக்கியமாக பூக்கள் இடம் பெறும். காரணம், கோவில் மற்றும் பூஜை உள்ளிட்டவைகளுக்கு பூக்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில், பெரும்பாலான மலர் சந்தைகளில் பூக்களின் விலை தாறுமாறாக விற்பனை செய்யப்படுகிறது. கன்னியாகுமரி, தோவாளை மலர் சந்தையில், ஒரு கிலோ ரூ.1,600 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ தற்போது ரூ.2,100க்கு விற்பனையாகிறது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,100 -க விற்பனை செய்ப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில், மல்லிகை பூ கிலோ 3000 ரூபாய்-க்கும், பிச்சிப்பூ, முல்லை பூ ஆகியவை கிலோ 2000 ரூபாய்-க்கும், மெட்ராஸ் மல்லிகை 2000 ரூபாய்-க்கும், சம்மங்கி பூ 250 ரூபாய்-க்கும், செண்டுமல்லி 100 ரூபாய்-க்கும், அரளிப்பூ 450 ரூபாய் -க்கும், பன்னீர்ரோஸ் 300 ரூபாய்-க்கும் விற்பனையாகிறது.
திண்டுக்கல் மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.4,000 க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.2,000க்கும், ஜாதிப்பூ கிலோ ரூ.1,500 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, புதுக்கோட்டை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.4,000 -க்கும், முல்லைப்பூ ரூ.3,000க்கும், ஜாதிப்பூ ரூ.3,000 -க்கும் விற்பனையாகிறது.