சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்!
Sep 13, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 12:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து வீரர் டிம் சவுதி படைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது.

அதன்படி நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 227 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது.

நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 46 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடியை அவுட்டாக்கியபோது டி20 கிரிக்கெட்டில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தினார் சவுதி.

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதன் முதல் இடத்தில் டிம் சவுதி 151 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாம் இடத்திலும், ரஷித் கான் 130 விக்கெட்டுகளை எடுத்து மூன்றாம் இடத்திலும், இஷ் சோதி 127 விக்கெட்டுகளை எடுத்து 4-வது இடத்திலும் உள்ளார்.

Tags: CricketNew Zealand player who set a new record in international cricket!
Share
Tweet
SendShare
Previous Post

கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!

Next Post

பாரதத்தின் வெற்றி அயோத்தி ராமர் கோவில்!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies