மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கோலாலம்பூரில் மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய அணியின் சார்பாக சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி பங்குபெற்றனர். இவர்களுடன் சீனா அணியின் ரென் ஜியாங் யு – ஹீ ஜிங் டிங் விளையாடினர்.
இந்த போட்டியில் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி இணை 21-11, 21-8 என்ற நேர்செட்டில் சீனாவின் ரென் ஜியாங் யு – ஹீ ஜிங் டிங் ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனைத் தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பில் அஸ்வினி பொன்னப்பா – தனிஷா கிரஸ்டோ ஜோடி பங்குபெற்றனர்.
இவர்களுடன் ஜப்பானின் ரின் இவானகா – கி நகானிஷி ஜோடி விளையாடியது. இந்த போட்டியில் அஸ்வினி – தனிஷா ஜோடி,15-21, 13-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ரின் இவானகா – கி நகானிஷி ஜோடியிடம் தோல்வியடைந்தது.