பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!
Mar 15, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் கிச்சான். இவர், பாபர் கால்சா எனப்படும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் சதிச் செயல்களை அரங்கேற்றுவதற்காக, காலிஸ்தான் அமைப்பினருக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்தார்.

இவருக்கு எதிராக பஞ்சாப் போலீஸார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம், ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், கைலாஷ் கிச்சானுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹேப்பி பாசியா என்கிற ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியாகவும் இருந்து வந்தார். எனவே, அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான், கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல்துறை தலைவர் கௌரவ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங், அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்ப்ரீதி சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மத்திய அரசு அமைப்புகளின் உதவியுடன் பஞ்சாப் மாநில காவல்துறையின் சிறப்புப் படை ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் கைது செய்திருக்கிறது. அப்போது, அவரிடமிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 8 தோட்டாக்கள் ஆகியவற்றையும் சிறப்புப் படையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக பாபர் கால்சா தீவிரவாத அமைப்புக்கு கைலாஷ் கிச்சான் ஆயுதங்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ArrestRajastanKhalistan Terrorist
ShareTweetSendShare
Previous Post

பனிச்சரிவு மீட்பு  நடவடிக்கையில் திறனை வெளிப்படுத்திய இந்திய இராணுவம்!

Next Post

ஜனவரி 19-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies