அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமெரிக்காவில் 150 வாகனங்கள் பங்கேறற லைட் ஷோ நடைபெற்றது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் கார் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன் பிரமாண்ட கார் பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 216 கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பங்கேற்றன. இதில் 500 இராம பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஹூஸ்டன் நகரில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலில் இருந்து தொடங்கிய பேரணி 100 மைல்களை கடந்து, ரிச்மண்டில் உள்ள ஸ்ரீ ஷரத் அம்பா கோயிலில் நிறைவு பெற்றது.