குமாரசாமி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை. எனினும், பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ, அதனைக் கேட்போம் என்று மதச்சார்பற்றி ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடா தெரிவித்திருக்கிறார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ஹெச்.டி.தேவகௌடா. தற்போது 90 வயதாகும் இவர், கர்நாடக முதல்வர் மற்றும் பிரதமராக இருந்தவர். இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேவகௌடா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, “நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும், எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் நான் நிச்சயம் பிரச்சாரத்துக்குச் செல்வேன். பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது.
மேலும், எனக்கு நினைவுத் திறனும் இருக்கிறது. இதைக் கொண்டு நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். அதேபோல, தேர்தலில் குமாரசாமி போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், பிரதமர் மோடி சொல்வதை கேட்போம்.
ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில், நான் எனது மனைவியுடன் கலந்து கொள்கிறேன்” என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.