ராகேஷ் பேடி, விந்து தாரா சிங் ஆகியோர் அயோத்தியில் ‘ராம்லீலா’ நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் நேற்று தொடங்கியது. இன்று பால ராமர் விக்ரக ஊர்வலம் அங்கே நடைபெற உள்ளது.
இந்நிலையில் நடிகர்கள் ராகேஷ் பேடி மற்றும் விந்து தாரா சிங் ஆகியோர் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் ‘பிரான் பிரதிஷ்டை’யை முன்னிட்டு ‘ராம்லீலா’ நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.
இது குறித்து பேசிய விந்து தாரா சிங், “ஜனவரி 16 முதல் 22 வரை அயோத்தியில் ராம் லீலா நிகழ்ச்சி நடத்த எனக்கு அழைப்பு வந்துள்ளது. நான் சிவன் வேடத்தில் நடிக்கிறேன். அயோத்தி உலகின் தலைசிறந்த புனிதத் தலமாக மாறும். கலியுகத்தில் கூட சத்யயுகம் வரப்போகிறது என்கிறார்கள். இது எங்கள் ராம் ஜி: மோடி ஜி, யோகி ஜி அவர்கள் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள்.
ராகேஷ் பேடி கூறுகையில், ”விமான நிலையம் கட்டப்பட்ட பிறகு தானாகவே நிறைய மாற்றங்கள் வரத் தொடங்கும். எங்கு விமான நிலையம் கட்டப்படுகிறதோ, அங்கெல்லாம் வளர்ச்சி தானாகவே மிக வேகமாக தொடங்கும்” என்றார்.
அயோத்தியில் இன்று முதல் ராமலீலா தொடங்கியுள்ளது. ராம்லீலாவில் விந்து தாரா சிங் சிவனாக நடிக்கிறார்.
நேபாளம், கம்போடியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பல நாடுகளில் இருந்து ராம்லீலா குழுக்கள் ராமோத்சவ் கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, கர்நாடகா, சிக்கிம், கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் மற்றும் சண்டிகர் போன்ற மாநிலங்களில் இருந்து ராம்லீலா குழுக்கள் ராமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிகழ்வுகளை வழங்குகின்றன.
துளசி பவன் நினைவிடத்தில் துளசி மஞ்சில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன, இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமலீலாக்களைக் காட்சிப்படுத்துகிறது.
மேலும், ராம்கதா பூங்காவில் உள்ள புருஷோத்தம் மஞ்ச், பஜன்-சந்தியா இடத்தில் சரயு மஞ்ச், துளசி உத்யானில் காக்புசுண்டி மஞ்ச் மற்றும் துளசி ஸ்மாரக் பவனில் துளசி மஞ்ச் ஆகிய இடங்களில் ராம்லீலா உள்ளிட்ட பல்வேறு கலாச்சார, ஆன்மீகம் மற்றும் நாட்டுப்புற கலை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.