ஹனுமான் படம் இந்திய அளவில் 4 நாட்களில் 50 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளது. இது கே.ஜி.எஃப்.சாப்டர் 1, காந்தாரா போன்ற படங்களில் முதல் வார வசூலை விட அதிகமாகும்.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் தான் ஹனுமான். ஆந்திராவில் சங்கராந்தி முன்னிட்டு இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் இப்படம் வெளியானது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயரும், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
பல மொழிகளில் நேற்று திரையரங்கத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் 4 நாட்களில் 50 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளது. இது கே.ஜி.எஃப்.சாப்டர் 1, காந்தாரா போன்ற படங்களில் முதல் வார வசூலை விட அதிகமாகும்.
படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருப்பதும் தொடர் விடுமுறை காரணமாகவும் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.
பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகி உள்ள ஹனுமான் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
படத்திற்கு டப்பிங் பக்காவாக பொருந்தி உள்ளதால் வெளியான அனைத்து மாநிலங்களிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹனுமான் படத்தைத் தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரம்மாண்ட வெற்றியை காணொளி மூலம் அறிவித்துள்ளது.