கூலிப்படை ஆளுங்கட்சியும் இணைந்து, திருவள்ளுவர் நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்தனர்! வள்ளலருக்கும் அழித்தனர் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
வள்ளலாருக்கும் அவ்வையாருக்கும் திருவள்ளுவருக்கும் திருநீறு அழிப்பு! பொங்கலுக்கு சமத்துவம்! தீபாவலிக்கு பசுமை! வினாயக சதுர்த்திக்கு கடல் மாசு! இதுவெல்லாம் மதமாற்ற சக்திகள் கண்டுபிடித்த யுத்திகள்!
ஈவேரா ஒரு அன்னிய ஏஜண்ட் என்பதுதான் எமது கருத்து! மீன் பிடிப்பதற்காக குட்டையை கலக்குவார்கள்! ”ஒரு சமுதாயத்தில், அல்லது ஒரு பகுதியில் மதமாற்றம் செய்யவேண்டும் என்றால், அங்கு வாழும் மக்கள் பின்பற்றிவரும் மதக்கொள்கைகளை இழிவு செய்ய வேண்டும்! அவர்களின் மதக்கொள்கைகள் மீது அந்த மக்களுக்கு இருக்கும் பிடிமானத்தை; உறுதியை உடைக்கவேண்டும்! அப்படி உடைப்பதற்காக உள்ளூர் மக்களையே பயன்படுத்த வேண்டும்!” – இது மதமாற்ற குழுக்களின் திட்டம்!
தமிழகத்தில் மதம் மாற்றம் செய்ய, இங்கு ஹிந்துமத பிடிமானத்தை ஹிந்துக்களிடம் தகர்க்க, இங்குள்ள ஹிந்துக்களை கூலிக்கு அமர்த்தவேண்டும்! கூலிக்கு ஆள் பிடிக்கும் வேலையை மதமாற்ற அமைப்புகள் செய்தன! பிரபலமான ஆட்களை பிடித்து ஹிந்துக்களை அவமானப்படுத்தும் வேலையை செய்தனர்! அவர்கள் முதன்முதலில் பிடித்த கூலிப்படை ஈவேரா!
அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், மதியழகன், கருணாநிதி இப்படியாக அந்த கூலிப்படை பட்டியல் நீண்டுக்கொண்டே சென்றது!
இப்போதும் கூலிப்படை தேர்வு நடக்கிறது! நடிகர் சிவக்குமார் அவரது மகன்கள், மருமகள், இன்னும் சில நடிகர்கள், நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் இப்படியாக பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்!
பல திரைப்படங்களும் இந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டன! பல பழைய வெற்றி படங்களும் கூட இந்த கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டதே! பாரதி ராஜாவின் படைப்புகள் பெரும்பாலும் இந்த நோக்கம் கொண்டதே! சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களிலும் இந்த நோக்கம் இருந்தது! திக, திமுக துவங்கி பல கட்சிகளும்கூட கூலிப்படை இயக்கமாக செயல்படுகின்றன!
கூலிப்படை என்றால் கூலியை அவர்களின் வங்கிக்கணக்கில் மாதாமாதம் செலுத்த மாட்டார்கள்! வேறு வேறு வகைகளில் ஊதியத்தை கொடுத்து விடுவார்கள்!
”மதச்சார்பற்ற”, ” மூட நம்பிக்கை”, “ஹிந்து என்றால் திருடன்”, “ராமர் இஞ்சினியரா”, “ஹிந்து திருமணங்கள் தவறானது” “ஹிந்துப்பெண்கள் நடத்தை கெட்டவர்கள்” “சிவபெருமான் குடும்ப கட்டுப்பாடு செய்தாரா” “ராமாயணம் கட்டுக்கதை”, “உண்டியலுக்கு காவல் எதற்கு?”, “கோயில் எதற்கு பள்ளிக்கூடம் கட்டலாமே”, ”வெள்ளைக்காரன் தான் படிப்பு சொல்லிக்கொடுத்தான்” ”சனாதன ஹிந்து தர்மத்தை அழிக்கவேண்டும்” இப்படியாக குட்டையை குழப்பும் வேலையை ஒருபக்கத்தில் கூலிப்படையினர் செய்துக்கொண்டிருப்பார்கள்! மறு பக்கத்தில் மதமாற்ற மிசினரிகளும், முஸ்லீம் மதமாற்ற அமைப்புகளும் மதமாற்றத்தில் ஈடுபடுவார்கள்! இதனை குட்டையை கலக்கி மீன்பிடிக்கும் தொழிலுடன் ஒப்பிடலாம்!
குட்டையை கலக்கவும் கூலிப்படை! மீன் பிடிக்கவும் கூலிப்படை! குட்டையை கலக்கும் கூலிப்படை ஹிந்துவாக இருக்கவேண்டும்! சிலர் மதம் மாறியும் அதை காட்டிக்கொள்ளாமல் ஹிந்து போல பேசுவார்கள்! தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் மதம் மாறி அதை காட்டிக்கொள்ளாமல் பேசுகிறவர்கள்தான்!
இந்த கூலிப்படைகள் எல்லோரும், கூலிப்படை ஆளுங்கட்சியும் இணைந்து, திருவள்ளுவர் நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்தனர்! வள்ளலருக்கும் அழித்தனர்! அவ்வையாருக்கும் அழித்தனர்! திமுக அரசு வெளியிட்ட பழைய படங்களையும் புதிய படங்களையும் எடுத்துவைத்து பார்த்தால் திருநீறு அழிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெளிவாக தெரியும்!
இவர்கள் எல்லோரும் சேர்ந்து, பொங்கல் பண்டிகையை ஹிந்துக்களிடமிருந்து பிரித்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள்! அந்த திட்டத்தின் செயல்பாடுகள்தான், பொங்கல் பண்டிகையை தமிழர் பண்டிகை என சொல்வது! சமத்துவ பொங்கல் என சொல்வதும் கூலிப்படை வேலைதான்! பொங்கல் பண்டிகையானது “சூரிய”பண்டிகையாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில், அதனை, தமிழர் பண்டிகை, சமத்துவ பண்டிகை என்றெல்லாம் சொல்லி, பொங்கல் பண்டிகையை ஹிந்துக்களிடமிருந்து பிரித்துவிடும் வேலையை, மதமாற்ற சக்திகள் திட்டமிட்டுக்கொடுத்து, இந்த கூலிப்படைகள் செயல்படுத்தி வருகிறார்கள்!
இது தமிழர்பண்டிகையல்ல, சமத்துவ பண்டிகையல்ல, இது ”சூரிய பண்டிகை” சூரிய பகவானை வணங்கும் பண்டிகை! சூரிய நாறாயண பண்டிகை!
சூரியனின் நகர்வை நம் முன்னோர்கள் இரண்டாக பிரித்தார்கள்! “அயனம்” என்றால் நகர்வு என்பது பொருள்! “உத்ராயணம்” “தட்சாயணம்” தெற்கு நோக்கி நகர்வு, வடக்கு நோக்கி நகர்வு! வடக்கு நோக்கிய நகர்வின் போது பகல் வேளை அதிகமாகவும் வெட்பம் அதிகமாகவும் அது பயிர் வளர்ச்சிக்கும் மனித வாழ்வுக்கும் அதிக நன்மை உடையதாகவும் அமைந்திருப்பதால்! உத்ராயண துவக்க நாளில் அதாவது தை மாதம் முதல் நாளில் நாம் பொங்கலிட்டு காய் கனிகளை படையல் செய்து சூரியனை ஆராதித்து வணங்குகிறோம்!
இந்த பொங்கல் பண்டிகை வழிபாடு, அறிவு பூர்வமானது! இந்த அறிவு உலகில் மற்றவர்களுக்கு இல்லை! இந்த அறிவுக்கு சொந்தக்காரர்களை உண்மையை உணர்ந்தவர்களை உண்மை கடவுளை வழிபடுகிறவர்களை தங்களின் மதத்திற்கு மாற்றுவது சிரமம்! எனவேதான், இத்தகைய அறிவு பூர்வமான அடையாளங்களை நம்மிடமிருந்து பிரித்து எடுக்கும் வேலையை கூலிப்படையினரை வைத்து மதமாற்ற சக்திகள் செய்கிறார்கள்!
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கான அமாவாசை, பௌர்னமி,சூரிய கிரணம், சந்திர கிரணம், எல்லாமும் நமக்கு தெரியும், சூரியனின் அசைவு தெரியும்! சூரியன்தான் கண்கண்ட தெய்வம் என்பது நமக்கு மட்டுமே தெரியும்! சூரிய நமஸ்காரம் பலகோடி ஆண்டுகளாகவே நமக்கு தெரியும்! இவ்வளவு ஞானம் பெற்ற நம்மை ஞானம் இல்லாதவர்களைப்போல காட்டிட முயலும் வேலைதான் சமத்துவ பொங்கல் என நம்மை சொல்ல வைப்பது!
உழவர் திருநாள்தான், தமிழர் திருநாள்தான், ஹிந்து என்னும் சொல்லின் பொருளே சமத்துவம்தான், எனவே சமத்துவ பொங்கல்தான்! ஆனால் இது சங்கராந்தி என பாரத தேசம் முழுமையும் கொண்டாடப்படக்கூடிய சூரிய பொங்கல்!
இந்த பண்டிகையின் வழிபாட்டு தெய்வம் சூரியன்! அறிவாளிகளாகிய நாம், முட்டாள்களிடமும் கூலிப்படையினரிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.