திருவள்ளுவரை ஒரு கிருஸ்தவ பாதிரியைப்போல பார்க்கிறது திமுக! வள்ளலாரையும் அப்படித்தான் திமுக பார்க்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
இன்று திருவள்லுவர் தினம்! 16-1-2024
திருவள்ளுவர் திக திமுக சிந்தனைக்கு எதிரானவர்!
எனவேதான் திக திமுகவினர் திருவள்ளுவரின் அடையாலங்களை அழித்து திருவள்ளுவரை கேவலப்படுத்தி வருகிறார்கள்!
50 ஆண்டுகலுக்கு முன்பு வெளியான ஒளவையார் திரைப்படத்தில் திருவள்ளுவர் அவரது உண்மையான அலங்காரத்தில் இருந்தார்! இப்போது திக திமுகவினரிடம் 6 முறை ஆட்சி அதிகாரம் வந்துவிட்டதால், திருவள்ளுவரை சிதைத்து அவரை கேவலமாக வடிவமைத்து விட்டனர்!
அரசாங்கம்தான் திருவள்ளுவரை கேவலப்படுத்துகிறது, மக்கள் திருவள்ளுவரை அவருக்குரிய வடிவத்தில்தான் வணங்குகிறார்கள்! விரைவில் ஆட்சி மாற்றம் வரும், திருவள்ளுவரும் தனது உண்மையான அடையாளத்தை மீண்டும் பெருவார்!
தமிழகத்தில் இரண்டு வகையான சிந்தனைகள் உள்ளன! ஒன்று ராஜராஜ சோழன் காலம் தொட்டு இங்கு இருந்துவந்த பன்பாடு பழக்கமுறைகள்! இன்னொன்று அன்னிய மதமாற்ற சக்திகளின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட திக திமுக இன்னும் கழகம் என பெயர் வைத்துள்ள கட்சிகளின் பலர் கொண்டுள்ள அன்னிய தமிழக கலப்பு சிந்தனை!
ராஜராஜ சோழனை பின்பற்றுவது பாஜகவாகவும் அன்னிய மேலைநாட்டு பழக்கவழக்கங்களை பின்பற்றுவது பாஜக அல்லாத கட்சிகளாகவும் இருக்கிறது!பொதுமக்கள் ராஜராஜ சோழன் காலத்து நமது பன்பாட்டை விரும்பினாலும், கழகங்களின் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்!
திருவள்ளுவரை எடுத்துக்கொண்டால் அவர் ராஜராஜ ழோழன் காலத்திய பன்பாட்டாளராகவே உள்ளார்! எனவே திக திமுக மற்றும் திக திமுகவைப்போல நடந்துக்கொள்ள முயலும் இதர கட்சியினருக்கும் வள்ளுவர் வேண்டாதவராக உள்ளார்!
எப்படி தமிழை அழிக்கவேண்டும் என முடிவு மேற்கொண்டு “தமிழ் வாழ்க” என அரசு அலுவலகங்கலில் எழுதி வைத்தார்களோ, அதே சிந்தனையில்தான், திமுக கன்னியாக்குமரியில் திருவள்ளுவர் சிலையை வைத்துவிட்டு உண்மையில் திருவள்ளுவரை கேவலப்படுத்துகிறது!
ஊழல்வாதி கருணாநிதி எழுதிய திருக்குறள் உரை, மிக மிக கேவலமானது! அது வள்ளுவரை அவமானப்படுத்துவது!
அன்னியர்களின் மதமாற்ற தொழிலுக்கு ஏற்றவகையிலும், தேசப்பக்தி தெய்வ பக்தி ஆகியவற்றிற்கு எதிரான வகையிலும், திருவள்ளுவரின் கருத்துகளை தனது உரையில் மாற்றியிருக்கிறார் கருணாநிதி!
வள்ளுவர் ”கள்ளுண்ணாமை” என்னும் கருத்தை வலியுறுத்தி எழுதியுள்ளார்! இவர்கள் சாராய வியாபாரத்தை அரசின் துணையோடு செய்கிறார்கள்! இவர்கள் நடத்தும் சாராய ஆலைகளுக்காகவே டாஷ்மார்க் கடைகளை அரசின் சார்பில் நடத்துகிறார்கள்!
திருவள்ளுவர் பிறன் மனை நோக்காமை என ஒழுக்க நிலையை வலியுறுத்தி பாடல்கள் படைத்துள்ளார்! அந்த வள்ளுவரின் ஒழுக்கத்திற்கும் இந்த திராவிட கொள்கையாளர்களுக்கும் சம்மந்தமே இல்லை!
திருவள்ளுவர் நேர்மை பற்றி அதிகமாக பேசியுள்ளார்! நேர்மை என்பதே குற்றம் என்பதுதான் திராவிடக் கொள்கை! ஊழலை சாமர்த்தியமாக செய்வதுதான் திராவிட கொள்கை!
ஹிந்து தர்மத்தின் விளக்கமாகவே திருக்குறள் அமைந்துள்ளது! அன்னிய மதமாற்ற கும்பலின் கூலிப்படையாகவே இங்கு பெரும்பாலாக திராவிட கட்சிகள் செயல்படுவதால், தங்களின் சொந்த கலாச்சாரமான ஹிந்து கலாச்சாரத்தையே கேவலப்படுத்தும் வேலையை பணத்திற்காக செய்துக்கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் எவ்வாறு திருவள்ளுவரை ஏற்க முடியும்?
அன்னியர்களின் மதமாற்றத்திற்கு சாதகமாக ”திருவள்ளுவர் ஒரு கிருஷ்தவர்” என்றுகூட திராவிட கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன! திருவள்ளுவர் காலத்தில் கிருஷ்தவமும் இஸ்லாமும் உலகில் தோன்றவே இல்லை! ஆதி பகவனை ஆராதிக்கும் திருவள்ளுவரை பகையாகவே திராவிடம் பார்க்கிறது!
மொத்தத்தில் திருவள்ளுவமும் திருக்குறளும் திராவிட கட்சிகளின் எதிரி! எனவேதான் அவர்கள் திருவள்ளுவரை பெரிதாக கொண்டாடுவதில்லை! திருக்குறளுக்கும் தவறாக மொழிபெயர்ப்பு செய்து வருகின்றனர்!
திருவள்ளுவரின் அடையாளங்களை களைந்துவிட்டனர்! திருவள்ளுவரை ஒரு கிருஸ்தவ பாதிரியைப்போல பார்க்கிறது திமுக! வள்ளலாரையும் அப்படித்தான் திமுக பார்க்கிறது! அவ்வையாரை கன்னியாஸ்திரியைப்போல பார்க்கிறது திராவிட கழகங்கள்! அவர்கள் பேச்சுக்கு பேச்சு தெரசாவைத்தான் தூக்கிப்பிடிப்பார்கள் அவ்வையாரை கண்டுக்கொள்வதே இல்லை!
திராவிட கட்சிகளின் வள்ளுவர் எதிர்ப்புக்கு காரணம், திருவள்ளுவரின் நேர்மை வலியுறுத்தலும், பிறன்-மனை நோக்காமையும், கள்ளுண்ணாமை கடிதலும்தான்! எனத் தெரிவித்துள்ளார்.