கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் அனைத்துமே ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பள்ளிகளே, தமிழ் பள்ளி எதையுமே இவர்கள் ஆதரிப்பதில்லை எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
திமுக ஒரு தீய சக்தி என்னும் கருத்தினை மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் வலியுறுத்தி வருகிறார்!
திமுக ஒரு தீய சக்தி என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு காரணத்தை மட்டும் இப்போது பார்க்கலாம்!
திமுக ஈவேரா என்னும் தமிழ் விரோதியின் வழி நடக்கும் கட்சி! ”தமிழ் என்னும் சனியனை விட்டு தொலைத்துவிடு, உன் மனைவியிடமும் வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொள்” என்று சொன்ன தமிழ் விரோதிதான் திமுக பின்பற்றும் ஈவேரா! இப்போது திமுகவினர் 6 வது முறையாக தமிழகத்தை ஆட்சி செய்துவருகிறார்கள்! அதாவது 6 வது முறையாக தமிழகத்தில் தமிழை அழித்து வருகிறார்கள்!
1949 செப்டம்பர் 16ம் தேதி சென்னை நேப்பியர் பூங்காவில் திமுக துவக்கப்பட்டதோது அதில் கருனாநிதி இல்லை! இரண்டாவது தினம் நடத்தப்பட்ட திமுகவின் முதல் பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாத்துரை துவங்கி, 22 தலைவர்கள் பேசினார்கள்! அந்த 22 ல் கருனாநிதி இல்லை! ஆந்திராவில் ஓங்கூல் பகுதியில் இருந்து இங்கு ஊடுருவிய தெலுங்கரான கருனாநிதி, பின்னர் திமுகவில் ஊடுருவி திமுகவின் தலைமையை திருடிவிட்டார்! கன்னடரான ஈவேராவின் கனவை நனவாக்கினார் கருனாநிதி!
திமுகவின் 6 வது ஆட்சி காலமான கருணாநிதியின் மகன் காலத்திலும் தமிழ் அழிக்கப்பட்டு வருகிறது! நம் தாய் மொழியான தமிழை அழிக்கும் வேலையை திமுக செய்யும் காரணத்தினால்தான் அந்த உண்மை மக்களுக்கு புரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அரசு கட்டிடங்களில் “தமிழ் வாழ்க” என்று எழுதி வைத்திருக்கிறது திமுக அரசு!
6 வது முறையாக ஆட்சியில் இருக்கும் திமுக ஒரு காசைக்கூட தாய்மொழி வளர்ச்சிக்காக செலவு செய்ததில்லை! வாசிப்புச்சாலைகளை கட்டுவது, அந்த வாசிப்புசாலைகளுக்காக புத்தகங்களை வாங்குவது, தமிழ் அறிஞர்களுக்கு அரசு சார்பில் பட்டங்களை வழங்குவது போன்ற பணிகளுக்காக அரசின் பணம் செலவு செய்யப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் அந்த செலவுகள் எதற்காக செய்யப்படுகிறது என்றால், தமிழ் வளர்ச்சிக்காக அல்ல, அந்த செலவீனத்தில் கமிஷன் பார்த்து தலைமை குடும்பத்தின் சொத்துக்களை பெருக்கிக் கொள்வதற்காகத்தான் தமிழ் வளர்ச்சி என்னும் பெயரில் சில திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன!
சென்னை பேரம்பாக்கத்தில் செம்மொழி தமி ஆய்வு மையம் உள்ளது! இதனை ரூபாய் 24.65 கோடி செலவு செய்து கட்டியது மத்திய அரசு! மாநில அரசு ஒரு காசுக்கூட செலவு செய்யவில்லை! தமிழை ஆராய்வது மத்திய அரசாகும்! தமிழை பேசுவதும் பிரதம மந்திரிதான், தெலுங்கை பூர்வீக மொழியாக கொண்ட ஸ்டாலினும் கருணாநிதியும், தங்களின் குருவான ஈவேரா வழியில் தமிழை அழிக்கிறார்களேயன்றி சற்றேனும் வளர்க்கவில்லை!
தாய் மொழியாம் தமிழை அழிக்கும் இந்த சதித்திட்டம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக! “உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு” என்றெல்லாம் வசனம் பேசுவார்கள்!
அரசியலில் தொடர்ந்து இருந்து, அமைச்சர்களாகவும், முதலமைச்சராகவும், எம்.எல்.எ ஆகவும், எம்.பி ஆகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர்கள், லாபத்தை குறிக்கோளாகக்கொண்ட நிறுவனங்களை நடத்தக்கூடாது! காரணம் அரசு பணியில் இருப்பவர்கள் வேறு தொழில் செய்யக்கூடாது என சட்டமும் தர்மமும் இருக்கிறது! ஆனால் அரசு பணத்தை கொள்ளையடிப்பதற்காகவும் தமிழை தமிழர்களை அழிப்பதற்காகவும் அரசியலில் இருப்பவர்களால் நிறுவனங்களை துவக்காமல் இருக்க முடியாது! இவர்களை பொறுத்தமட்டில் அரசியல் என்பது ஒரு வியாபாரம்தான்! இந்த இடத்தில் நான் சொல்ல வருவது இந்த ஆந்திரா குடும்பம் துவக்கிய நிருவனங்களின் பெயர்களில் எதுவுமே தமிழ் பெயர் இல்லை!
அரசு சார்பிலும் இவர்களின் ஆட்சியின்போது அந்நிய நிறுவனங்களுக்கு இங்கே அனுமதி வழங்கப்பட்டது! வழங்கிய அனுமதிகள் எதுவும் தமிழகத்தின் மத்திய பகுதியில் இல்லை! அனைத்துமே ஆந்திரா எல்லையில்தான்! அங்கு உருவாகும் வேலைவாய்ப்புகள் அனைத்தையும் கருனாநிதி குடும்பத்தின் பூர்வீக சொந்தமான ஆந்திராக்காரர்களே தட்டிச்செல்கிறார்கள்!
தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில் அம்மா அப்பாக்கு பதிலாக மம்மி டாடி என்றுதான் சொல்லித்தருகிறார்கள்! கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் அனைத்துமே ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பள்ளிகளே! தமிழ் பள்ளி எதையுமே இவர்கள் ஆதரிப்பதில்லை!
ஈவேராவின் கொள்கையான “தமிழ் சனியனை ஒழிப்போம்” என்னும் கொள்கையை தலையாக கொள்கையாக கொண்டு செயல்படும் இந்த கருணாநிதி ஸ்டாலின் குடும்ப ஆட்சியை முடித்துவைத்து, தமிழை அழிக்கும் இந்த குடும்பத்தை தூக்கி எறிந்தால்தான் தமிழகமும் தமிழர்களும் உருப்பட முடியும்! எனத் தெரிவித்துள்ளார்.