இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரில் நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதேபோல் இரண்டாவது போட்டியிலும் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைபற்றியது.
இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஒய்ட்வாஷ் செய்து இத்தொடரின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.
மறுபுறம் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் முடிந்தளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
எனவே கடைசி போட்டியில் முழுமூச்சுடன் விளையாடி ஒயிட்வாஷ் தோல்வியைத் தவிர்க்கும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் களமிறங்க உள்ளது. சின்னசாமி மைதானம் ஐபிஎல் முதல் சர்வதேசம் வரை பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது.
குறிப்பாக இங்குள்ள பிட்ச் ஃபிளாட்டாகவும் பவுண்டரிகளின் அளவு சிறியதாகவும் இருக்கும். எனவே அதைப் பயன்படுத்தி நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாகப் பெரிய ரன்கள் குவிக்கலாம்.
மேலும் இந்த போட்டியில் இந்தியா 84% வெற்றி பெறும் என்றும், ஆப்கானிஸ்தான் 16% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.