இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்திய அணியின் எச்.எஸ்.பிரனாய் உடன் இந்திய அணியின் பிரியன்ஷூ ரஜாவத் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
டெல்லியில் நேற்று இந்திய ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் பங்குபெற்றார்.
உலக தரவரிசை பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் சீன வீரர் சோய் டின் சென் விளையாடினார்.
இந்த போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-6, 21-19 என்ற நேர்செட்டில் சீனாவின் சோய் டின் சென்னை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், லக்ஷயா சென்னுடன் விளையாடினார்.
இந்த போட்டியில் பிரியன்ஷூ ரஜாவத் 16-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழகதினார். இதன் மூலம் இரண்டாவது சுற்றில் இந்திய அணியின் எச்.எஸ்.பிரனாய் உடன் இந்திய அணியின் பிரியன்ஷூ ரஜாவத் விளையாடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணை பங்குபெற்றது.
இவர்கள் சீன தைபேயின் லீ யாங்-வாங் சி லின் இணையுடன் விளையாடினர். இதில் சீன தைபே வீரர்களிடம் இந்திய வீரர்கள் 9-21, 13-21 என்ற நேர்செட்டில் தோல்வியைத் தழுவினர்.