அயோத்தியில் இருந்து பெங்களூர் மற்றும் கொல்கத்தா செல்லும் விமான சேவைகள் தொடக்கம்!
Sep 13, 2026, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் இருந்து பெங்களூர் மற்றும் கொல்கத்தா செல்லும் விமான சேவைகள் தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 17, 2024, 05:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் இருந்து பெங்களூர் மற்றும் கொல்கத்தா செல்லும் விமான சேவைகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்  ஜோதிராதித்ய சிந்தியா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அயோத்தியில் இருந்து பெங்களூர் மற்றும் கொல்கத்தாவுடன் இணைக்கும் விமான சேவைகளைக் காணொலி காட்சி மூலம் இன்று (17.01.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா  வடக்கில் தில்லி, மேற்கில் அகமதாபாத் ஆகிய நகரங்களுடன் அயோத்தி ஏற்கனவே நேரடி விமானப் போக்குவரத்து சேவையில் இணைக்கப்பட்டதாகக்  கூறினார். தற்போது கிழக்கில் கொல்கத்தா, தெற்கில் பெங்களூரூ  ஆகிய நகரங்களுடனும் அயோத்தி இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 17 நாட்களுக்குள், அயோத்தி, நாட்டின் நான்கு முனைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளதாக  கூறினார்.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலுக்குச் செல்ல நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களுக்கு இந்த விமான இணைப்புகள் உதவும் என்று தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கும் என்றும்,  2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 19 ஆக உயரும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த விமான சேவைகளைத் தொடங்கியதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரசுக்கு நன்றி தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச அரசின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இந்த முன்முயற்சி சுற்றுலாவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த நகரங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் வும்லுன்மங் வுல்னம் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: bengalur airportAyothi ramar temple
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: நேருக்கு நேர் மோதும் இந்திய வீரர்கள்!

Next Post

என் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் தான் ஹீரோ – யுவராஜ் சிங்!

Related News

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies