எனது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் அதில் யார் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக சினிமாவில் எடுக்கும்பொழுது அந்த படத்திற்கு வரவேற்பு அதிக அளவில் கிடைக்கும்.
அதன்படி ஏற்கனவே சில கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வெற்றியும் கண்டுள்ளனர்.
குறிப்பாக சச்சின் டெண்டுல்கரின் பயோபிக், தோனியின் பயோபிக் மற்றும் தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு என அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
அதேபோல் இந்தியாவின் முதல் உலக கோப்பை நாயகனான கேப்டன் கபில்தேவ் எப்படி உலகக்கோப்பையை வென்றார் என்பது குறித்து ’83’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இவ்வாறாக விளையாட்டு வீரர்களின் பயோபிக்கிற்கு பெரிய வரவேற்பு இருப்பதால் அந்த படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது யுவராஜ்சிங்கிடம் உங்களது பயோபிக் திரைப்படம் உருவானால் அதற்கு ஹீரோவாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ” சமீபத்தில் நான் அனிமல் திரைப்படம் பார்த்தேன். அதில் ரன்பீர் கபூர் நடிப்பை கண்டதிலிருந்து எனது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் திரையில் என்னைப் பிரதிபலிக்க அவர்தான் பொருத்தமாக இருப்பார் எனும் முடிவில் உள்ளேன்.
ஆனால், அது இயக்குநரின் முடிவைப் பொறுத்தது. இது சம்பந்தமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்து நல்ல செய்தி அளிப்பேன் ” என்று கூறினார்.