திருச்சியில் உள்ள ஒரு பிரபல பல்கலைக் கழகத்தில் 650-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வரும் இரண்டு மாணவர்களுக்கு, கடந்த 13 -ம் தேதி அன்று நடைபெற்ற கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மாணவர் ஒருவரே, சக மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து குடிக்க வைத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர், பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மூன்று பேராசிரியர்கள் அடங்கிய குழுவை பல்கலைக் கழகத் துணை வேந்தர் அமைத்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மூன்று பேர் கொண்ட குழுவினர், பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் குற்றச்சாட்டு உள்ளானவர்கள் உள்ளிட்ட 7 பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். இது தொடர்பான விசாரணை அறிக்கை நாளை, அதாவது 18 -ம் தேதி துணை வேந்தரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மாணவர்களை துணைவேந்தர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.