அயோத்தியில் ஸ்ரீராமர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் திருக்கோவிலை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அயோத்தி ராமர் கோவில் விழா குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இந்தியாவின் முதல் இந்திய கவனர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்.
இது தொடர்பாக அவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காரணம், இந்திய மக்கள் அனைவரின் விருப்பம் தற்போது நிறைவேற உள்ளது. அதாவது 550 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேற உள்ளது.
பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ள ஸ்ரீராமர் சிலையை காண நமக்கு பாக்கியம் கிடைத்திருக்க வேண்டும். ஆன்மீகத்தில் மூழ்கிய ஒரு தத்துவ ஞானியாக பிரதமர் மோடி உள்ளார்.
அயோத்தியில் கட்டுப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவில் இந்துக்களின் நம்பிக்கை மட்டும் அல்ல. கோடிக்கணக்கான இந்துக்களின் பல நூறு ஆண்டுகள் கனவும் கூட. அந்த கனவு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்துக்களின் கனவை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் மோடிக்கு கோடானகோடி நன்றி என்றார்.