இந்தியாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் துரோகம் செய்துள்ளதாக, மகாத்மா காந்தியடிகள் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, மகாத்மா காந்தியடிகள், பி.சி. ஜோஷிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பான ஜோஷி அவர்களே முதலில் உங்களுக்கு இனிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு உடனடி பதிலை எதிர்பார்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. இருப்பினும், எனக்குள் சில கேள்விகள் எழுந்துள்ளது. அதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
அதாவது, முதலில், மக்கள் போர்” என்றால் என்ன என்ரு தெரிய வேண்டும், மக்கள் என்றால் யார்? அது இந்தியாவின் மில்லியன் கணக்கானவர்களுக்காக அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்கள் அல்லது அமெரிக்காவின் நீக்ரோக்கள் அல்லது அவர்கள் அனைவரின் சார்பாக போரைக் குறிக்கிறதா? என கேள்வி எழுப்பியதோடு, நேச நாடுகள் இப்படியான போரில் ஈடுபட்டுள்ளனவா? என அறிந்து கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து, இரண்டாவதாக, நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி பொது தணிக்கைக்கு உட்பட்டதா? ஒரு வேளை அதுகுறித்து அவர்களை விளக்கம் கொடுக்கப்பார்களா? அதை அறிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்றாவதாக, சட்ட விரோத தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியிந் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நான்காவதாக, குரோத நோக்கத்துடன் காங்கிரஸ் அமைப்பினுள் ஊடுருவும் கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி செய்து வருவதாகவும், இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்படி, கம்யூனிஸ்ட் கட்சியினரின் துரோகங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மகாத்மா காந்திக்கும் பி.சி. ஜோஷிக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தற்போது வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.