சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த சில குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 46 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, ரூ. 5 ஆயிரத்து 780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.33 குறைந்து, ரூ.6 ஆயிரத்து 305-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 40 காசுகள் குறைந்து, ரூ.77-க்கும், ஒரு கிலோ 77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.