அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை!
Sep 14, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 10:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது. மேலும் இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது.

இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சிலை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் ராமர் சிலை கொண்டு வர ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்ற போது “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களுக்கு மத்தியில் சிலை உள்ளே கொண்டு செல்லப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது.

10 டன் எடையும், 6 அடி அகலமும், 4 அடி தடிமனும், கிட்டத்தட்ட ஒரு அடி நீளமும் கொண்ட இந்த கல், கார்கலாவில் உள்ள நெல்லிக்கரு கிராமத்தில் இருந்து, ஒரு மாதத்திற்கு முன்பு சிறப்பாக கொண்டு வரப்பட்டது.

மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கிய 51 அங்குல உயரமான சிலை, அயோத்தி கோயில் அறக்கட்டளையால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கோயில் அறக்கட்டளை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அருண், சிலையில் ஐந்து வயது குழந்தையான ராமர், தாமரையின் மீது ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் அம்பும் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். அதுமட்டுமின்றி, இந்தச் சிலை சிறந்த சிற்பங்கள் மற்றும் வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. 51 அங்குல உயரம் கொண்ட இந்த சிலையில் ராமர் தொடர்பான அனைத்து அடையாளங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இது எப்போதும் செய்யக்கூடிய மிகச் சிறந்த வேலை” எனத் தெரிவித்தார்.

தற்போது, கோயிலுக்கு சிலை எடுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சிலை இன்று நிறுவப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் குழந்தை ராமர் சிலைக்கு சிறப்பு சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் இன்று குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டதை தொடர்ந்து யாகங்கள் நடத்தப்படும். அதனை தொடர்ந்து, கணேஷ் அம்பிகை பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன் மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை அடுத்தடுத்து நடைபெறகிறது.

குழந்தை வடிவிலான ராமர் சிலை சன்னதிக்குள் நுழைந்த நிலையில் நாளை அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

ஜனவரி 20 ஆம் தேதி, ராமர் கோயில் வளாகத்தில் சர்க்கரை, பழம் மற்றும் பூக்களை கொண்டு பூஜைகள் செய்யப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து, இந்நாளில் கோயிலில் பல்வேறு நதிகளின் நீரால் சுத்திகரிக்கப்படும். மேலும், கோயிலின் கருவறையை சரயு நதியில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் கழுவப்பட்டு , வாஸ்து அமைதி மற்றும் அன்னாதிவாஸ் சடங்குகள் நடத்தப்படும்.

தொடர்ந்து, ஜனவரி 21ம் தேதி125 கலசங்களில் உள்ள புனித தீர்த்தங்களை கொண்டு குழந்தை ராமர் சிலை சுத்தம் செய்யப்படும்.  இதைத் தொடர்ந்து ஜனவரி 22-ம் தேதி ராம் லல்லாவின் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு, குழந்தை ராமர் சிலையின் கண்கட்டு அவிழ்க்கப்படும்.

காலை பூஜை முடிந்த பின்னர், மதியம் 12:20 மணிக்கு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், பிரதமர் மோடியால் ராமரின் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு ஆரத்தி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும்.  இந்நிலையில், அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவ சிலையை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன.

Tags: Ayothi ramar temple
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – ஆப்கானிஸ்தான் : டபுள் சூப்பர் ஓவர்!

Next Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies