தாய்லாந்து நாட்டின் முவாங் அருகே சுபான் புரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்து நாட்டின் முவாங் மாவட்டத்தில் உள்ள சுபான் புரி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் சிக்கி 22 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 20 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களில் 12 பெண்களும், 8 ஆண்களும் அடங்குவர்.
மேலும், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்து நடந்த பகுதியில் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு மனித உடல்களும், பொருட்களும் சிதறி காணப்படுகின்றன.
வெடிவிபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்லாந்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளில், பட்டாசு தொழிற்சாலைகளில் 24 வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.