சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர்க்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் நிறுத்தப்பட்டது. விமானியின் சாதுரியத்தால், 148 பயணிகள் உட்பட 160 பேர் உயிர் தப்பினர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர்க்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 148 பயணிகளும், 14 விமான ஊழியர்களும் என மொத்தம் 160 பேர் இருந்தனர்.
இந்த விமானம் ஓடுபாதையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.
இதை அடுத்து, விமானம் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானியின் உடனடி நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 160 பேர் உயிர் தப்பினர்.