அயோத்தி ராமர் கோவிலுக்கு ஓணவில் பரிசு!
Mar 15, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலுக்கு ஓணவில் பரிசு!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோயில் பாரம்பரியம் மிக்க ஓணவில் ஒன்றை ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கவுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பாரம்பரியம் மிக்க ஓணவில் ஒன்றை பரிசாக வழங்கவுள்ளது.

இந்த பத்மநாபசுவாமி கோவில் இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் இடம்பெற்றுள்ளது. பலராமர் இந்தக் கோயிலுக்குச் சென்று, பத்மதீர்த்தத்தில் நீராடி, பல பிரசாதங்களைச் செய்ததாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

9ஆம் நூற்றாண்டின் கவிஞரும், 12 வைணவ ஆழ்வார்களின் ஒருவருமான நம்மாழ்வார் பத்மநாபரைப் புகழ்ந்து பத்து பாடல்களை இயற்றியுள்ளார்.

பத்மநாபசுவாமி கோயிலின் கிழக்கு வாசலில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், கோயில் தந்திரி மற்றும் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் பிரதிநிதிகளிடம் ஓணவில்லை வழங்குவார்கள் என்று ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஓணவில் வழங்குவது ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் செய்யப்பட்டு வரும் மூன்னூறு ஆண்டுகள் பழமையான சம்பிரதாயம் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டைகையை முன்னிட்டு, ஒரு பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பத்மநாப கோவிலில் ஓணவில் காணிக்கை செலுத்துகிறார்கள்.

பத்மநாப சுவாமி கோயில் சார்பில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்படும் ஓணவில் கொச்சியில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்குக் கொண்டு செல்லப்படும்.

முன்னதாக, சன்னதி வளாகத்தில் வைக்கப்படும் ஓணவில்லை இன்று பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்த ஓணவில் மரத்தாலான பலகையில் இருபுறமும் ஓவியங்களைக் கொண்டிருக்கும். அனந்தசயனத்திலும் தசாவதாரம், ஸ்ரீராம பட்டாபிஷேகம் போன்ற பல்வேறு விஷயங்கள் ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

Tags: Ayothi ramar temple
ShareTweetSendShare
Previous Post

3 நாள் பயணமாக அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு அமித்ஷா இன்று செல்கிறார்!

Next Post

செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies