அசாமில் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத் செயற்கை நுண்ணறிவு குறித்து உரையாற்றியுள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டார்.
அங்கு, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசினார்.
இதுகுறித்து அவர், ” செயற்கை நுண்ணறிவு குறித்து இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. உங்கள் மொபைல் போன் உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு உள்ளீடும், உங்களைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கிறது. நீங்கள் யார் என்பதும், உங்களுக்குப் பிடித்தது என்ன என்பதும் அதற்கு நன்றாகத் தெரியும்.
உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கோ, அல்லது உங்களுக்கோ தெரியாத விஷயங்கள் கூட உங்கள் கணினிக்குத் தெரிந்திருக்கும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெற்று, இங்குள்ள பல விஷயங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ” எனக் கூறினார்.