பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்வது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
जय श्री राम!
मैं 22 जनवरी को अयोध्या अपने पूर्वजों और ख़ासकर अपने दादा जी पंडित अमरनाथ जी का प्रतिनिधित्व करूँगा! ये सब राम मंदिर की स्थापना का सपना देखते थे! मेरे सभी कश्मीरी हिंदू भाई बहन आत्मिक रूप से मेरे साथ होंगे! 🙏
श्री राम लल्ला का अयोध्या लौटना यह विश्वास जगाता है कि,… pic.twitter.com/If8BVdmjvD— Anupam Kher (@AnupamPKher) January 18, 2024
இதில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அவர்களுக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்வது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அனுபம் கெர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஹிந்தியில் ஒரு நீண்ட குறிப்பை எழுதியுள்ளார். அதில், ” ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நான் எனது முன்னோர்கள் சார்பாகக் குறிப்பாக எனது தாத்தா பண்டிட் அமர்நாத் அவர்களைப் பிரதிநிதித்துவம் படுத்தி நான் கோவிலுக்குச் செல்வேன்.
இவர்கள் அனைவரும் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கனவு கண்டனர். ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்தால் தான் எனக்கு இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ராமர் கோவிலில் உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்வேன் ” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற மோகன்லால், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அனுபம் கெர், மாதுரி தீட்சித், சிரஞ்சீவி, சஞ்சய் லீலா பன்சாலி, அக்ஷய் குமார், தனுஷ், ரன்தீப் ஹூடா, ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, கங்கனா ரனாவத், ரிஷப் ஷெட்டி, மதுர் பண்டார்கர், அஜய் தேவ்கன், ஜாக்கி ஷெராஃப், டைகர் ஷெராஃப், யாஷ் பிரபாஸ், ஆயுஷ்மான் குரானா, ஆலியா பட், சன்னி தியோல் ஆகிய சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.