உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உயரமான பகுதியில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால், கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது.
உலக பிரசித்தி பெற்ற புனித ஸ்தலங்கள் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழிகள் முழுவதும் பனி சூழ்ந்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, வரும் 23-ஆம் தேதி வரை, கேதார்நாத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை, 16 முதல் 18 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அப்பகுதியில் உள்ள வீடுகளை பனி முழுவதும் மூடி உள்ளது. பத்ரிநாத் கோவிலும் பனியால் சூழப்பட்டிருக்கிறது. மேலும், ஹேம்குந்த் சாஹிப், ருத்ரநாத் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.