ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்! - உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
Mar 15, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்! – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான் முதலமைச்சராக இல்லாவிட்டாலும், ராமர் கோயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்திருப்பேன் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் இயக்கத்தால் தாம் சன்யாசி ஆனதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய அவர், ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அரசியல் ரீதியாக ஆதாயப்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

“ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயில் இயக்கத்தில் எனக்கு தொடர்பு உண்டு. உண்மையில் ராமர் கோயில் இயக்கத்தால் தான் நான் ‘சன்யாசி’ ஆனேன். இருப்பினும், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு நான் எந்த பெருமையையும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ராமரின் அடியார்களாக அயோத்திக்கு செல்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் அதில் பங்கேற்க மறுத்துவிட்டதாக கூறினார். ராமர் கோயிலுக்கு யாரும் வருவதை தடுக்கவில்லை. ராமரின் அடியார்களாக வருபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் எனக் கூறினார்.

சமாஜ்வாதி மற்றும் பிற கட்சியினரின் குணாதிசயங்கள் மக்களுக்கு தெரியும் என எதிர்க்கட்சிகளை அவர் கிண்டல் செய்தார். “நான் முதலமைச்சராக இல்லாவிட்டாலும், ராமர் கோயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்திருப்பேன். ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்” எனக் கூறினார்.

‘இது பெருமை சேர்த்துக் கொள்ளும் தருணம் அல்ல; ராமர் தான் தெய்வீக தந்தை’ எனக் கூறினார். தனது குருவின் பங்களிப்பை நினைவுகூர்ந்தவர், ராமர் கோயில் இயக்கத்தின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்த தனது மதிப்பிற்குரிய குருதேவ் மஹந்த் அவைத்யநாத்ஜியைப் பெற்றது தான் செய்த அதிர்ஷ்டம் என்றார்.

ராமர் கோயில் இயக்கத்தில் கோரக்ஷ்நாத் பீடத்தின் தொடர்பு மற்றும் பங்கு மற்றும் கோயில் இயக்கத்தில் மஹந்த் அவியாத்யநாத்தின் பங்கு பற்றி  பேசிவர், “3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

76 க்கும் மேற்பட்ட மோதல்கள் கோயில் திருப்பணிக்காக நடந்தன. கோரக்ஷ்நாத் பீடத்திற்கு மக்கள் அடிக்கடி செல்வார்கள். அந்த போராட்டத்தின் பலனாக இன்று கோயில் தலை நிமிர்ந்து நிற்கிறது.” என்று தெரிவித்தார்.

Tags: UP CM Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை பிப்ரவரி வரை நீட்டிப்பு: பிரதமர் மோடி!

Next Post

காஷ்மீராக மாறிய ஊட்டி: சுற்றுலா பயணிகள் அவதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies