வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா, அன்று நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் காரணமாக, ராமர் கோயில் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களில் 22 ஜனவரி 2024 அன்று மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது.