ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அதேபோல் இந்த கோயிலின் கட்டுமானப் பணி தனித்துவம் வாய்ந்தது. இந்த கோவில் நிறையச் சிறப்பம்சங்களைக் கொண்டது.
அதேபோல் இக்கோவில் முழுக்க முழுக்க கற்களால் ஆனது. அந்தக் காலத்தைப் போன்று இந்த கோயிலைக் கற்களால் செதுக்கி உள்ளனர். இதில் சிமெண்ட் மற்றும் இரும்பு போன்ற உலோகங்கள் பயப்படுத்தப்படவில்லை.
ராமர் கோயில் கட்டுமானம் குறித்து ரூர்க்கியில் உள்ள CSIR-Central Building Research Institute (CBRI) இயக்குநர் பேராசிரியர் ராமஞ்ச்ரலா பிரதீப் குமார், ” மற்ற கட்டுமான பொருட்களை விடக் கற்களின் ஆயுள் அதிகம் என்பதால் நாங்கள் கற்களைப் பயன்படுத்தினோம். ராமர் கோயில் மிகவும் இணக்கமான கல்லைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.
எனவே ராமர் கோயில் வலிமையான கட்டிடக்கலையைப் பறைசாற்றும் விதத்தில் கட்டப்பட்டு உள்ளது. இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தவில்லை. கூடுதலாகக் கோயில் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டப்பட்டு உள்ளது ” என்று கூறியுள்ளார்.
அதேபோல் இக்கோவில் தனித்துவமான கல்லைப் பயன்படுத்திக் கட்டப்பட்டு உள்ளது. ராமர் கோயிலில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கல்லிலும் பள்ளம் வெட்டப்பட்டு பிறகு அந்த பள்ளத்தில் மற்ற கற்களைப் போட்டுக் கட்டியுள்ளனர்.
கற்கள் ஒவ்வொன்றும் இணக்கமான முறையில் இணைக்கப்பட்டு உள்ளன. ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது.
இந்த இளஞ்சிவப்பு கல் வலுவாக இருப்பதோடு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. ராம் லல்லாவின் சிலையைச் செதுக்குவதற்காக நேபாளத்திலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த ஷாலிகிராம் கற்களைச் செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராம் லல்லா 5 வயதுக் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.